காமராசரின் 117-வது பிறந்த நாள் விழா எம் பள்ளியில் (15-7-2019) அன்று கல்வி வளர்ச்சி நாளாக தாளாளர், தலைமையாசிரியை முன்னிலையில் இறைவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவில் மாணவிகளால் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது. மேலும் காமராசரின் தமிழ்வளர்ச்சி, மின்சாரப்புரட்சி, நிலச் சீர்திருத்தம், முதியோர் ஓய்வு ஊதியத்திட்டம், சீருடைத்திட்டம் போன்றவை இவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதை மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்பு இறுதியில் அவருக்காக சிறிது நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு விழா நிறைவுற்றது
|