புதிய விடியலின் காத்திருப்பு
ஆடி ஓடி ஓய்ந்த உன் அற்புத பயணத்திற்கு அடியேனின் வாழ்த்துரை.
மிஸ் மேரி என்ற பெயருக்கு
நிதானம் பிரதானம் என்பது பொருள்!
புனித அந்தோனியாரின் அன்பு காதலி!
செவ்வாய் கிழமைகள் விடிவது உனக்காகத்தான்!
பட்டங்கள் பல பெற்ற பண்புள்ள தேவதை!
எளிமையின் இளவரசி!
இளையோர்களின் எடுத்துக்காட்டு!
துறவியிலும் தூய்மை துறவி!
எம் பள்ளியின் நாட்டியப் பேரொளி நீ!
நவரசம் ததும்பும் முகம்! நாட்டியம் ஆடும் கால்கள்!
காத்திருக்கிறது நவம்பர் 14!
பிரிவு என்பது நமக்கில்லை!
ஒரே குடும்பத்தின் இரத்த பந்தம் நாம்!
இலையுதிர் காலம் வந்தது வயது முதிர்வால்!
ஆனால் நீ என்றும் வாழும் வசந்த காலம்!
இப்பள்ளிக்கும் இப்பணிக்கும் மட்டுமே பிரிவு உபச்சாரம்!
உம் படிப்பிற்கும் பட்டத்திற்கும் அல்ல!
நீ சிந்தனை சிற்பி!
கலைகளின் அரசி!
கற்ற உனக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!
கவலை வேண்டாம்! கலக்கம் வேண்டாம்!
புதிய வேர்! புதிய துளிர்!
பூமியை தோண்டி புறப்படு!
புதிய விடியல் காத்திருக்கின்றது!
வாழ்வாய் வளமுடன்...
வாழ்த்துவது---
தை. சாந்தி மேரி.
( தமிழ்த்துறை)
|